1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2023 (18:30 IST)

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பாஜகவின் முடிவு என்ன?

narayan tirupathi
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து இன்னும் பாஜக முடிவு எடுக்கவில்லை என்றும் பாஜகவின் முடிவு இன்னும் இரண்டு நாட்களில் தெரிவிக்கப்படும் என்றும் பாஜக தெரிவித்துள்ளது. 
 
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக இன்னும் வேட்பாளரை அறிவிக்காத நிலையில் இன்று அண்ணாமலை தலைமையில் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாராயணன் திருப்பதி பாஜகவின் நிலைப்பாடு இன்னும் இரண்டு நாளில் அறிவிக்கப்படும் என்றும் யாருக்கு ஆதரவா என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
இரட்டை இலை தொடர்பான வழக்கில் பாஜகவுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும் இந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறக் கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran