1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 31 ஜனவரி 2023 (08:02 IST)

பா.ஜனதாவுடன் மீண்டும் கைகோர்ப்பதை விட உயிரை மாய்த்துக்கொள்வேன்: முதல்வர் அறிவிப்பு

bjp
பாஜகவுடன் மீண்டும் கை கோர்ப்பதை விட உயிரை மாயத்து கொள்வேன் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பிகார் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த நிதீஷ் குமார் திடீர் என கடந்த 2017 ஆம் ஆண்டு கூட்டணியிலிருந்து விலகினார். புதிய கூட்டணி மூலம் அவர் மீண்டும் முதலமைச்சர் ஆனதை அடுத்து தற்போது நிதீஷ் குமாருக்கும் அவரது புதிய கூட்டாளியான ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து அவர் மீண்டும் பாஜகவுடன் என்ற கேள்வி எழுந்த நிலையில் பாஜகவுடன் மீண்டும் கை கோர்ப்பதை விட நான் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்றும் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார். 
 
எங்களது ஆதரவால்தான் பாஜக பலன் பெற்றது என்றும் பாஜகவால் எங்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். பீகார் மாநில முதலமைச்சரின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மற்றும் பள்ளி
 
Edited by Siva