1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 18 ஜூலை 2019 (14:01 IST)

ஆறு பேர் மரணத்துக்குக் காரணமான முதல்வர் ராஜினாமா செய்யணும்- வைகோ

ஒன்பது பாரதப் பிரதமர்களை நேருக்கு நேர் சந்தித்து, தன் பேச்சாற்றதால் பாராளுமன்றத்தையே அதிரவைத்தவர் மதிமுக பொதுச்செயலாளர் மற்றும் மாநிலங்களவை எம்.பியாகவுள்ள வைகோ.
 

சமீபத்தில் வைகோவுக்கு தேசதுரோக வழக்கில் ஒருவருட தண்டனை விதிக்கப்பட்டதால்,இன்று அவர் சிறப்பு நீதிமன்றத்திற்கு வருகை தந்தார்.  அப்போது அவர் தீடீரென்று எடப்பாடி ராஜினாமா செய்ய வேண்டுமென்று குரல் கொடுத்தார். பின்னர் அவர் செய்தியாளரகளிடம் கூறியதாவது :
 

தமிழகத்தில் நீட் தேர்வு வராது, நாங்கள் தடுத்து வைத்திருக்கிறோம். இரு மசோதா நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி விட்டோம். குடியரசு தலைவருக்குச் சென்றுவிட்டது என்றெல்லாம் கூறி அதிமுகவினர் மாணவர்களை நம்ப வைத்தனர்.ஆனால் அந்த மசோத 2017 ல் அனுப்பியது, அதை மத்திய அரசு அப்பொழுதே திருப்பி அனுப்பிவிட்டது.

இந்நிலையில் இதை வெளியில் சொல்லாமல் மசோதாவை நிறுத்தி வைத்துள்ளார்கள். பரிசீலனையில் உள்ளது.  என்றெல்லாம் கூறி மக்களை இரு ஆண்டுகளாக ஏமற்றியுள்ளனர்.  நீட் தேர்வு வராது என்று கூறி 7 அரை கோடி தமிழர்களையும் ஏமாற்றியுள்ளனர். நீட் தேர்வால் மருத்துவ கல்லூரிகளில் இடம்கிடைக்காத 6 பேர் தற்கொலை செய்துகொண்டார்கள். இந்த ஆறு பேரின் சாவுக்கு முதலமைச்சர்தான் காரணம் எனவே எடப்பாடி பழனிசாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.