புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 29 ஜூலை 2019 (09:30 IST)

சட்டைய கிழிச்சிட்டு ரோட்ல போனாருல... எல்லாம் பதவி வெறி: ஸ்டாலினை விளாசிய எடப்பாடி!

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி மீது வெறி என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 
 
வேலூர் மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இருக் கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் வேலூரில் முகாமிட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். 
 
அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ சி சண்முகத்துக்கு ஆதரவாக தரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கே.வி.குப்பம் பகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். 
எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, முதல்வர் நாற்காலி மீது ஸ்டாலினுக்கு அவ்வளவு வெறி. வீதியில் சட்டையை கிளித்துக்கொண்டு சென்றால் என்ன நினைப்பீர்கள். உதயநிதிக்கு சட்டப்பேரவையில் புகழ்பாடுகின்றனர். 
 
குடும்பத்திற்காக பாடுபடும் கட்சி திமுக, தொண்டர்களால் உருவான குடும்பக் கட்சி அதிமுக, குடும்பத்தில் இருப்பவர்களால் ஆன கட்சி திமுக. இப்போது கூட வேலூர் தொகுதியில் திமுக சார்ப்பில் போட்டியிடுவது யார் வாரிசுதானே.. 
 
அதிமுக ஆட்சியை கவிழ்க்க திமுக முயற்சி செய்தது. ஆனால் அது நடக்கவில்லை. அதிமுகவின் தொண்டனை கூட தொட்டுப்பார்க்க முடியாது. ஒரு காலத்திலும் அதிமுக அரசை வீழ்த்தவோ, கவிழ்க்கவோ, கட்சியை உடைக்கவோ முடியாது என பேசினார்.