திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 4 ஏப்ரல் 2024 (15:50 IST)

10 ரூபாய் பாலாஜி கப்பம் கட்டியதால் செயல்வீரர் என்று அழைக்கிறார் ஸ்டாலின்:- எடப்பாடி பழனிசாமி

பத்து ரூபாய் பாலாஜி ஒவ்வொரு மாதமும் முதல்வர் ஸ்டாலினுக்கு கப்பம் காட்டியதால் தான் அவரை செயல்வீரர் என்று முதல்வர் ஸ்டாலின் அழைத்து வருகிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கரூரில் இன்று அதிமுக வேட்பாளர் தங்கவேலுக்கு பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் நேரத்தில் என்ன பேசுவது என்றே தெரியாமல் முதல்வர் மு க ஸ்டாலின் பேசி வருகிறார் 
 
கடந்த மூன்று ஆண்டு காலத்தில் திமுக அரசு என்ன சாதனை செய்தது என்று கூட அவரால் சொல்ல முடியவில்லை. திமுக ஆட்சியில் தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்த போது முதல்வர் ஸ்டாலின் பேசியதை யாரும் மறந்துவிட முடியாது
 
அதே செந்தில் பாலாஜி தனக்கு கப்பம் கட்டுவதால் அவரை செயல்வீரர் என்று தற்போது முதல்வர் ஸ்டாலின் பாராட்டி வருகிறார். பத்து ரூபாய் பாலாஜி தினமும் பாட்டிலுக்கு பத்து ரூபாய் பெற்று கப்பம் கட்டியதால்தான் அவரை செயல்வீரர் என்று முதல்வர் ஸ்டாலின் அழைத்து வருகிறார் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Edited by Siva