வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 3 ஏப்ரல் 2024 (14:35 IST)

முன்னாள் பிரதமருக்கு நன்றி கூறிய முதல்வர் ஸ்டாலின்

mk.stalin -manmohan singh
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

33 ஆண்டு காலம் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
 
இந்த நிலையில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நன்றி கூறியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங்,33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக நாட்டுக்குநீங்கள் செய்த அளப்பரிய சேவைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்உங்கள் பதவிக் காலம் முழுவதும், பணிவு, அறிவாற்றல் மற்றும்அரசியல் திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய அரிய கலவையானசெயல்பாடுகள் மூலமாக கட்சிகள் கடந்து மரியாதை மற்றும்பாராட்டைப் பெற்றீர்கள்.

நான் உட்பட பலருக்கும் உங்களது தலைமைத்துவம் உத்வேகமாகஅமைந்துள்ளது.இந்திய ஒன்றியத்துக்கும், மக்களுக்கும் மகத்தான பங்களிப்புசெய்த பெருமிதத்துடன் உங்கள் வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்குசெல்வீர்கள் என நம்புகிறேன்.

நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.எதிர்க்கால திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் எனதிமுக சார்பிலும், தமிழ்நாட்டு மக்கள் சார்பிலும் வாழ்த்துகிறேன்.உங்கள் அறிவாற்றல் மற்றும் தொலைநோக்குப் பார்வை மூலம் எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்''  என்று தெரிவித்துள்ளார்.