புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 நவம்பர் 2021 (16:09 IST)

பொங்கலுக்கு கரும்பு தறாங்க.. பணம் தரலை! – எடப்பாடியார் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கலுக்கு வழங்கப்படும் தொகுப்பில் பணம் வழங்கப்படவில்லை என எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் தமிழகத்தில் பொங்கல் கொண்டாடப்படும் நிலையில் தமிழக அரசு சார்பில் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பை மற்றும் பணம் வழங்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் வரும் பொங்கலுக்கு வழங்க உள்ள பொங்கல் பையில் உள்ள பொருட்கள் குறித்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ” பொங்கல் விழாவினை மக்கள் சிறப்பாக கொண்டாடும் நோக்கோடு கடந்த அம்மா அரசின் ஆட்சியில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அடங்கிய தொகுப்போடு பொங்கல் பரிசு பணமும்,முழு கரும்பும் வழங்கி வந்தோம். ஆனால் திமுக அரசு முதலில் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் பணம்,கரும்பை காணவில்லை, தற்போது அறிவித்திருக்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டு,தொகுப்போடு வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசு பணத்தை காணவில்லை” என கூறியுள்ளார்.

மேலும் “அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்போடு பரிசு பணமும் வழங்கப்பட வேண்டும் என இந்த விடியா திமுக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.