பெண்களுக்கு துரோகம் இழைத்த மோடி: இமாச்சல பிரதேசத்தில் சர்ச்சை குற்றச்சாட்டு!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 6 நவம்பர் 2017 (14:01 IST)
பிரதமர் நரேந்திர மோடி பெண்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

 
 
இமாச்சல பிரதேசத்தில் வரும் 9 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 
 
தேர்தலுக்கு சில தினங்களே உள்ள நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் பின்வருமாரு பதிவிட்டுள்ளார். 
 
பிரதமர் நரேந்திர மோடி, பெண்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கடந்த 2010 மார்ச் 9 ஆம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. 
 
இந்த மசோதாவை பெரும்பான்மை பயன்படுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். 
 
ஆனால், இன்று வரை இந்த மசோதாவை நிறைவேற்றாமல் பிரதமர் பெண்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார் என குற்றம் சாட்டியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :