வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (08:59 IST)

வேலை நிறுத்தத்தால் மின் விநியோகம் பாதிக்காது: அமைச்சர் தங்கமணி

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மின்வாரிய ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கவுள்ளனர். இதனால் மின்விநியோகம் பாதிக்கபப்டுமா? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, மின்வாரிய ஊழியர் சங்கங்களை அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் அதனைப் சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது

அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே இந்த வேலைநிறுத்தத்திற்கு காரணம். மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக போராட்டத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். பேச்சுவார்த்தைக்கு வராமல் போராட்டம் திட்டமிட்டபடி நடந்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது

மேலும் வேலைநிறுத்தம் செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது. அதுமட்டுமின்றி மின் தடையை தவிர்க்க தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை' என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கவேல் கூறியுள்ளார்.