வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (19:32 IST)

வெயில் காரணமாக தீப்பிடித்து எரிந்த E-பைக்.. அருகில் இருந்த சேமிப்பு கிடங்கும் சாம்பல்..!

ஓசூரில் வெயில் காரணமாக E-பைக் திடீரென தீப்பிடித்து எறிந்த நிலையில் இந்த விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த சேமிப்பு கிடங்கிலும் தீ பரவியதை அடுத்து அந்த சேமிப்பு கிடங்கு சாம்பலானதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக கொளுத்தி வரும் நிலையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அப்போது திடீரென வெப்பம் தாங்காமல் தீப்பிடித்து எரிந்து வரும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. 
 
அந்த வகையில் ஓசூரில் இன்று வெயில் காரணமாக திடீரென E-பைக் தீப்பிடித்து எரிந்தது. இந்த பைக்கில் வந்தவர் சுதாரித்துக் கொண்டு உயிர் தப்பிய நிலையில் அந்த பைக் முழுமையாக எறிந்த போது அருகில் இருந்த பிளாஸ்டிக் இரும்பு பொருட்கள் வைத்திருக்கும் சேமிப்பு கிடங்கிலும் தீ பரவியது.
 
 இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பழைய பொருட்கள் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்கள் முழுமையாக இருந்து சேதம் அடைந்து விட்டதாகவும் லட்ச கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva