கல்வி நிறுவனத்தில் தீ விபத்து!
ஆந்திரம் மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
இங்குள்ள விசாகப்பட்டினம் காஜூவாக்காவில் தனியார் கல்வி நிறுவனம் உள்ளது. இன்னும் இரண்டு தினங்களில் மாணவர்களுக்கு தேர்வு நடைபெற இருந்த நிலையில், இன்று தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கல்வி நிறுவனத்தில் இன்று காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில், அக்கட்டிடத்தில் உள்ள உணவகம் மற்றும் நகைக்கடைகள் அமைந்துள்ள இடங்களுக்கும் பரவியது.
இதுகுறித்து காவல்துறைக்கும், தீயணைத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தீவிபத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை ;இவ்விபத்து எப்படி ஏற்பட்டதற்கான் காரணமும் வெளியாகவில்லை.