1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 10 மார்ச் 2018 (13:27 IST)

நெஞ்சிருக்கும் வரை எம்.ஜி.ஆரை மறக்கமாட்டேன்- துரைமுருகன் நெகிழ்ச்சி

வேலூரில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நெஞ்சிருக்கும் வரை எம்.ஜி.ஆரை மறக்கமாட்டேன் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

 
 
வேலூரில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடந்தது. அதில் பங்கேற்று  துரைமுருகன் பேசியதாவது:-

என்னை படிக்க வைத்தவர் எம்.ஜி.ஆர், என்னை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். எனது அரசியில் மற்றும் தனிப்பட்ட வாழக்கையில் பெரும் உதவியாக இருந்தார். என்னை சென்னை கல்லூரிக்கான தேர்தலில் நிக்க வைத்து வெற்றி அடைய செய்தார்.
 
சட்டபேரவையில் நான் எதிர்கட்சியில் இருந்த போது ஒருநாள் மயங்கி விழுந்தேன்.அப்போது எம்.ஜி.ஆர் என்னை பார்த்து கலங்கினார். என்னை அவர் அதிமுகவிற்கு அழைத்த போது நான் அவரது கட்சிக்கு செல்ல மறுத்துவிட்டேன்.இதை அவரே வெளிப்படையாக சட்டபேரவையில் பேசி என்னை பாரட்டினார். நான் நெஞ்சிருக்கும் வரை எம்.ஜி.ஆரை மறக்கமாட்டேன் என பேசினார்.