புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 28 நவம்பர் 2023 (14:33 IST)

சென்னையில் ஓட்டுநர் இல்லாத ரயில்கள் எப்போது? மெட்ரோ நிர்வாகம் தகவல்..!

சென்னையில் இன்னும் 28 மாதங்களில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

சென்னை அடையாளங்களில் ஒன்றான மெட்ரோ ரயில்  பயணிகளின் விருப்பத்திற்குரிய ஒன்றாக உள்ளது என்பதும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

 இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் இரண்டில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் உருவாக்க அல்ஸ்தாம் ட்ரான்ஸ்போர்ட் இந்தியா என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ரூபாய் 269 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தங்கள் மூலம் ஏற்கனவே 26 ரயில்கள் தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக 10 ரயில்கள் என மொத்தம் 36 ரயில்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

 பூந்தமல்லி  வழித்தடம் 4ல்  கட்டப்படும் பணிமனையில், இன்னும் 28 மாதங்களில் 108 பெட்டிகள் கொண்ட 36 மெட்ரோ ரயில்கள்  இயக்கப்படும் என்றும், இந்த ரயில்கள் அனைத்தும் ஓட்டுநர் இல்லாமல் ஓடும் வகையில் அமைக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Edited by Siva