திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 26 நவம்பர் 2023 (07:31 IST)

நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் இடைவெளி நேரம் குறைப்பு.. பயணிகள் மகிழ்ச்சி..!

நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் இடைவெளி நேரம் குறைக்கப்படுவதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது

தற்போது சென்னை மெட்ரோ ரயில் ஒன்பது நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது. நாளை முதல் ஏழு நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நெரிசல் இல்லாத நேரங்களில் ஏழு நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மெட்ரோ ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வரும் நிலையில் பயணிகள் வசதிக்கு ஏற்பவும். விடுமுறை நாட்களிலும் கூடுதலாக மெட்ரோ ரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன

9 நிமிட இடைவெளியில் இருந்து 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பு அனைவருக்கும் மகிழ்ச்சியான அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva