1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (12:19 IST)

இதுகூட தெரியாத ஒரு எதிர்க்கட்சி தலைவர்: ஸ்டாலினுக்கு ராமதாஸ் கண்டனம்

அக்டோபர் 21ஆம் தேதி விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சமீபத்தில் விக்கிரவாண்டியில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் பேசியதாவது
 
நான்கு நாட்களுக்கு முன்பு நான் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது இந்த மாவட்டத்தில் வன்னியர் இனத்திற்காக குரல் கொடுத்து பாடுபட்ட திரு ராமசாமி படையாட்சியார் அவர்களுக்கு கழக ஆட்சி வந்தவுடன் மணிமண்டபம் அமைப்போம் என்ற அந்த உறுதிமொழியை நான் தந்திருக்கின்றேன். மேலும் அதே உணர்வோடுதான் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த ஏஜி என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட ஏ கோவிந்தசாமி அவர்களுக்கு ஒரு மணிமண்டபம் அமைக்க வேண்டும். காரணம் அவர்களும் இந்த தமிழ் சமுதாயத்திற்கு பாடுபட்டவர், பணியாற்றியவர் என்று பேசியிருக்கிறார் 
 
முக ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு டாக்டர் ராமதாஸ் பதிலடி கொடுத்துள்ளார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:  திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இராமசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபம் அமைக்கப் போவதாக விக்கிரவாண்டியில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்திருக்கிறார். இராமசாமி படையாட்சியருக்கு கடலூரில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராக இருக்கிறது.
 
இந்த உண்மை கூட தெரியாமல் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். வன்னியர் தலைவர் குறித்த நிகழ்கால நிலவரம் கூட தெரியாத இவர் தான் வன்னியர் நலனைக் காப்பாற்றப் போகிறாராம். இது தான் காலக் கொடுமை போலிருக்கிறது! இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.