ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 24 ஜூலை 2024 (16:27 IST)

தோற்கடித்தவர்களை பழிவாங்க வேண்டாம்.! - பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!!

Stalin Modi
இன்னமும் தோற்கடித்தவர்களை பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம்’ என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
 
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒருசில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும் என்று சொன்னீர்கள், நேற்றைய பட்ஜெட் பாஜக ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது என்று தெரிவித்துள்ளார். அரசை பொதுவாக நடத்துங்கள், இன்னமும் தோற்கடித்தவர்களை பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.