திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 30 ஏப்ரல் 2022 (08:00 IST)

திமுக பிரமுகரை கூலிப்படை வைத்து கொலை செய்த 4 பேர் கைது!

four arrest
திமுக பிரமுகரை கூலிப்படை வைத்து கொலை செய்த 4 பேர் கைது!
திமுக பிரமுகர் செல்வம் என்பவரை கூலிப்படை வைத்து கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னையை சேர்ந்த திமுக பிரமுகர் செல்வம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார் 
 
இந்த வழக்கில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களிடம் விசாரணை செய்ததில் ரியல் எஸ்டேட் தொழில் போட்டியால் ஏற்பட்ட பகை காரணமாக கூலிப்படையை வைத்து தீர்த்துக் கட்டியது தெரியவந்தது 
 
மேலும் இந்த கொலையில் சார்பதிவாளர் அலுவலக ஊழியர் ஒருவரும் சம்பந்தப்பட்ட இருப்பதாக தெரிகிறது 
 
இதனையடுத்து கூலிப்படையை ஏவி திமுக பிரமுகர் செல்வத்தை கொலை செய்ததாக ஜெயமுருகன், உமாமகேஸ்வரன், சகாய டென்ஸி மற்றும் பி ரமேஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்