1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (10:19 IST)

எதிர்க்கட்சிகள் உருப்படியாக பேசனும்... ஆளும் கட்சிக்கு சசிகலா வக்காலத்து!

எதிர்க்கட்சிகள் உருப்படியாகவும் ஆக்கப்பூர்வமாகவும் ஏதாவது சொல்ல வேண்டும், அப்படி சொல்வது நல்லது என சசிகலா பேட்டி. 

 
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் உள்ள அப்பர் கோவிலில் 94வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று முந்தினம் இரவு தேர்வலம் விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில் தேர் நகர்வலம் முடிந்து கோவிலை நெருங்கியபோது உயர் மின் அழுத்த கம்பியில் உரசியது. இதனால் தேரினுள் நின்ற 10 பேர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதால் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அசம்பாவிதம் நடந்த பகுதிக்கு நேரில் சென்று வந்தார். இதனைத்தொடர்ந்து தஞ்சாவூர் களிமேட்டில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினரை நள்ளிரவில் நேரில் சென்று சந்தித்து வி.கே.சசிகலா ஆறுதல் கூறினார். 
 
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த சசிகலா, இந்த விபத்திற்கு ஆளுங்கட்சியை குறைக்கூறகூடாது. எதிர்க்கட்சிகள் என்பதால் எதையாவது அவர்கள் கூறிக் கொண்டு தான் இருப்பார்கள். தொட்டதெற்கெல்லாம் ஆளும் கட்சியை குறை கூறாமல் எதிர்க்கட்சிகள் உருப்படியாக ஏதாவது சொல்ல வேண்டும். ஆக்கப்பூர்வமாக சொல்வது நல்லது என தெரிவித்துள்ளார்.