திமுக மண்டல மாநாடா? ரஜினி எதிர்ப்பு மாநாடா?
சமீபத்தில் ஈரோட்டில் நடந்த திமுக மண்டல மாநாட்டில் ஆளுங்கட்சியை விமர்சனம் செய்ததைவிட ரஜினியை விமர்சனம் செய்தவர்கள் தான். அதிகம். மாநாட்டில் பேசிய மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து முன்னணி பேச்சாளர்களும் ரஜினியை விமர்சனம் செய்தார்கள் என்றால் அவர்கள் தங்கள் போட்டியாளராக, எதிரியாக ரஜினியைத்தான் பார்ப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த மாநாட்டில் ரஜினியை விமர்சனம் செய்தவர்கள் குறித்து தற்போது பார்ப்போம்
திமுகவின் பேச்சாளர் சைதை சாதிக்: ‘தளபதி அழைக்கிறார்! இளைஞனே எழுந்து வா!’ என்ற தலைப்பில் பேசிய இவர் ‘என் தமிழ் இளைஞன், வேங்கை மகன் அழைத்தாலும் வரமாட்டான், விருமாண்டி மகன் அழைத்தாலும் வரமாட்டான். ஆனால் தலைவர் மு.க.வின் மகனான எங்கள் தளபதி அழைத்தால் எழுந்து வருவான்
திண்டுக்கல் லியோனி: ”லட்சோப லட்சம் தொண்டர்களை வைத்திருந்த அண்ணாவே தேர்தல் அரசியல் முடிவை தன்னிச்சையாக எடுக்கவில்லை. தொண்டர்களிடம் வாக்கு சீட்டு கொடுத்து அவர்களை முடிவெடுக்க சொல்லித்தான் தேர்தலுக்கு வந்தார். ஆனால் வெற்றிடம் இருப்பதாக சொல்லும் நபரோ...கட்சி துவக்கும் முன்னேயே முதல்வராக ஆசைப்படுகிறார்
முன்னாள் அமைச்சர் பொன்முடி: வீரபாண்டிய கட்டப்பொம்மன் வசனம் போல் ‘ரஜினி நீ ஒரு தமிழனா, தன்மானம் உள்ளவனா, மானங்கெட்டவனே’
மு.க.ஸ்டாலின்: வெற்றிடம் இருக்கிறது என்றபடி சிலர் அரசியலுக்கு வருகிறார்கள். எந்த வெற்றிடமும் இங்கில்லை. அவர்களாக உருவாக்கும் மாய பிம்பம் அது.’
ஆக எம்ஜிஆரை அதிகம் விமர்சனம் செய்து அவரை அசைக்க முடியாத ஒரு தலைவராக மாற்றிய பெருமை திமுகவையே சேரும். அதுபோல் ரஜினியையும் ஒரு பெரிய தலைவராக மாற்றாமல் இந்த திமுகவினர் விடமாட்டார்கள் போல் தெரிகிறது.