செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 29 மார்ச் 2018 (13:33 IST)

காவிரி நீர் விவகாரம் : கடைசி நாளில் கருத்து கூறிய ரஜினிகாந்த்

காவிரி விவகாரம் பூதாகரம் ஆகியுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இது பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

 
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை தமிழகத்தில் எழுந்துள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்த கெடுவும் இன்றோடு முடிவடைகிறது. ஆனால், மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதே சமயம், உச்ச நீதிமன்றம் கூறிய ‘திட்டம்’ என்கிற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு வருகின்ற சனிக்கிழமை மத்திய அரசு சார்பில் மனு அளிக்கப்படவுள்ளது. 
 
உச்ச நீதிமன்றம் அளிக்கும் விளக்கத்திற்கு பின் பார்த்துக்கொள்ளலாம் என்கிற நிலைப்பாட்டில் மத்திய அரசு இருப்பதாக தெரிகிறது. மேலும், கர்நாடகாவில் வருகிற மே 12ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதுவரைக்கும் இந்த விவகாரத்தை தள்ளிப்போடவே மத்திய அரசு விரும்புவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் “ காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய  நியாயமான  தீர்வாக இருக்க முடியும்.  நீதி நிலைநாட்டப்படும் என  நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார். 
 
காவிரி விவகாரம் கொளுந்து விட்டு எரிகிற நிலையில், உச்ச நீதிமன்றதின் கெடு முடிவடையும் கடைசி நாளான இன்று, ரஜினி கருத்து தெரிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில்  கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.