Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

செயல் தலைவர் விவகாரம் - மறுப்பு தெரிவித்த திமுக

stalin
Last Modified புதன், 31 ஜனவரி 2018 (14:54 IST)
எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை செயல் தலைவர் என்றே அழைக்க வேண்டும் என முரசொலியில் செய்தி வந்ததாக வெளியான செய்தியில் உண்மையில்லை என திமுக தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

 
இன்று காலை ஒரு சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவியது. திமுக சார்பில் வெளியான அறிக்கை, முக்கிய அறிவிப்பு என்கிற தலைப்பில் வந்த அந்த செய்தியில் ‘முரசொலி-யில் இன்று (31.01.2018) முதல் அனைத்து செய்திகள் மற்றும் விளம்பரங்களில் கழக செயல் தலைவர் அவர்கள் என்றே குறிப்பிடப்பட வேண்டும். தளபதியின் பெயர் இடம் பெறக்கூடாது” என கூறப்பட்டிருந்தது.
 
இதனையடுத்து, சில ஊடகங்கள் அவ்வாறே குறிப்பிடத் தொடங்கின. இந்த செய்தி சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவியது.
 
இந்நிலையில், இப்படி செய்தி எதுவும் வெளியிடவில்லை என திமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள செய்தியில், முரசொலி வெளியிடாத ஒரு செய்தியை, வெளியிட்டதாக சில நாளிதழ்கள் விஷமத்தனமான பொய்ச் செய்தியினை வேண்டுமென்றே வெளியிட்டுள்ளன. இதுபோன்ற செய்தியை திமுகவோ, முரசொலியோ வெளியிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :