புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 19 டிசம்பர் 2019 (22:14 IST)

திமுகவை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ்: உள்ளாட்சி தேர்தலில் பரபரப்பு

உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் இந்த தேர்தலுக்கான மனுதாக்கல் முடிவடைந்து தற்போது அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே  திமுகவை எதிர்த்து  காங்கிரஸ் கட்சியினர்  போட்டியிடுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் என்ற பகுதியில் உள்ள கம்மாபுரம் என்ற ஊராட்சி ஒன்றியத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை செய்யபட்டது. வேட்பாளர்களுக்கான  சின்னங்கள் ஒதுக்கப்படும் பணியும் நடைபெற்றது. இந்த நிலையில் 17-வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய நிலையில் திடீரென திமுக சார்பில்  பூங்குழலி என்ற வேட்பாளர் மனு தாக்கல் செய்தார்.
 
அதேபோல், சத்தியவாடி மற்றும் கோமங்கலம் பகுதியில், திமுக கூட்டணியை எதிர்த்து திமுக கூட்டணியினரே போட்டியிடுவதால் இரு அக்கட்சியினரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இரு கட்சிகளின் மேலிடங்கள் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது