திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 12 ஜனவரி 2019 (12:47 IST)

தம்பிக்கு கம்பி கன்ஃபார்ம்: தினகரனை வாரிய அன்பழகன்

ஸ்டாலினை விமர்சனம் செய்த தினகரனை திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அமமுக திமுகவில் சேர வாய்ப்பிருக்கிறது என கிசுகிசுக்கப்பட்டு வந்தநிலையில் கடந்த சில தினங்களாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் வார்த்தைப்போர் முற்றி வருகிறது. சமீபத்தில் திமுகவின் முரசொலியில் தினகரனை விமர்சிக்கும் வகையில் செய்தி வெளியானது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக ஒரு ஊழல் கட்சி, அதன் மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளது.
 
ஸ்டாலின் உள்ளாட்சிதுறை அமைச்சராக இருந்தபோது மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு போதிய வசதிகளை செய்துகொடுக்காமல் தற்பொழுது திருவாரூரில் சென்று கண் துடைப்பு நாடகத்தை நடத்துகிறார். திருவாரூரில் கூவி கூவி மீன் விற்பனை செய்துகொண்டிருக்கிறார் என்றெல்லாம் தினகரன் ஸ்டாலினை விமர்சித்தார்.
 
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தி.மு.க-வை திட்டினால், பா.ஜ.க வோடு நெருக்கமாகி விடலாம், தான் சிக்கியிருக்கும் ஃப்ராட் வழக்குகளில் இருந்தும் எப்படியாவது தப்பித்து விடலாம் என்கிற கணக்கில் பா.ஜ.கவுக்கு சிக்னல் கொடுக்கிறார் தம்பி தினகரன்,  என்னதான் தி.மு.க-வை திட்டி சிக்னல் கொடுத்தாலும், சிறை உறுதி! என தினகரனை போட்டு லெப்ட் ரைட் வாங்கியுள்ளார். இதற்கு தினகரன் என்ன சொல்லப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.