ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 27 மே 2016 (12:40 IST)

விஜயகாந்த் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் கட்சியினர்

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக படுதோல்வியடைந்தது. அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட்டை இழந்து தோல்வியடைந்தார். தேமுதிகவின் இந்த மிக மோசமான வீழ்ச்சி கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.


 
 
இந்நிலையில் கட்சியின் தோல்வி குறித்து கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசித்து வரும் விஜயகாந்த், தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்களிடம் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருகிறார்.
 
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தோல்வியடைந்த தேமுதிக வேட்பாளர்கள் அனைவரும் கூறிய ஒரே குற்றச்சாட்டு தேமுதிக மக்கள் நல கூட்டணியில் சேர்ந்திருக்க கூடாது, திமுக கூட்டணியுடன் சேர்ந்திருக்க வேண்டும் என்பதாகும்.
 
கட்சியினர் தேர்தலுக்கு முன்னரே விஜயகாந்திடம் வலியுறுத்தினர் தேமுதிக மக்கள் நல கூட்டணியுடன் சேராமல் திமுக உடன் சேர வேண்டும் என. ஆனால் விஜயகந்த் மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்து கட்சியை சீரழித்து விட்டனர் என குற்றம் சாடும் கட்சியினர் வரும் உள்ளாட்சி தேர்தலின் போது தேமுதிக மக்கள் நல கூட்டணியில் இருந்து வெளியேறி தனியாக நின்று தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைப்பதாக தேமுதிக வட்டாரத்தில் பேசப்படுகிறது.