செருப்பு மாட்டிவிட ஒரு அதிகாரி: திண்டுக்கல் சீனிவாசன் அட்டூழியம்!

Last Updated: வெள்ளி, 29 ஜூன் 2018 (21:03 IST)
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சமீபத்தில் சென்னையில் நடந்த ரத்ததான முகாமில் அதிகாரி ஒருவரை தனது செருப்பை மாட்டிவிட அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
இரத்ததானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள காவலர்கள், இன்று சிறப்பு இரத்ததான முகாமை ஏற்பாடு செய்திருந்தனர். 
 
காவலர்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த இரத்ததான முகாமை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவங்கிவைத்தார். இந்த விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். 
 
இந்த நிகழ்ச்சியின் போது, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செருப்பில் ஏதோ சிக்கல் ஏற்பட்டபோது, அவர் அங்கிருந்த பிஆர்ஓவை அழைத்து, அதை சரிசெய்து அவரை வைத்து செருப்பை மாட்டிக்கொண்ட சமபவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், அவர் மீது பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :