வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 26 ஜூன் 2018 (15:45 IST)

ராணுவ அதிகாரியின் லீலைகள் அம்பலம் - மேஜரின் மனைவிக்கு 6 மாதத்தில் 3500 போன் கால்

டெல்லியில் மேஜரின் மனைவி கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியான மற்றொரு ராணுவ அதிகாரி, மேஜரின் மனைவிக்கு 6 மாதத்தில் 3500 போன் கால் செய்தது அம்பலமாகியுள்ளது.
டெல்லியை சேர்ந்தவர் ராணுவ அதிகாரி அமித் திவிவேதி. இவருடைய மனைவி சைலஜா திவிவேதி. அமித் திவிவேதி நாகாலாந்தில் பணியாற்றிய போது ஹண்டா என்ற மற்றொரு ராணுவ அதிகாரியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஹண்டா அவ்வப்போது அமித் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது ஹண்டாவுக்கும் சைலஜாவிற்கும் நட்பு ஏற்பட்டது. பின் அமித் குடும்பத்துடன் டிரான்ஸ்ஃபரில் டெல்லிக்கு திரும்பினார். டெல்லி திரும்பியபோதும் ஹண்டாவுடன் நட்பை தொடர்ந்துள்ளார் சைலஜா.
 
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஹண்டாவும் டிரான்ஸ்ஃபரில் டெல்லிக்கு திரும்பினார்.  பிறகு ஹண்டாவும் சைலஜாவும் நேரில் சந்தித்தனர். ஹண்டா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சைலஜாவிடம் கேட்டுள்ளார். இதற்கு சைலஜா கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறில், ஹண்டா சைலஜாவை கொலை செய்துவிட்டு தப்பினார். பின் போலீஸார் ஒரு லாட்ஜில் பதுங்கியிருந்த ஹண்டாவை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் சைலஜா ஹண்டாவுடன் அவ்வப்போது செல்போனில் பேசி வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. ஹண்டா சைலஜாவிற்கு 6 மாதத்தில் 3500 போன் கால் செய்துள்ளார்.
ஒருமுறை ஹண்டாவும் சைலஜாவும் வீடியோ காலில் பேசியதை பார்த்த அமித் சைலஜாவைக் கண்டித்துள்ளார். அதே போல் ஹண்டாவையும் கண்டித்துள்ளார். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு இந்த சம்பவம் மிகப்பெரிய எடுத்துக்காட்டு.