திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 31 ஜனவரி 2024 (07:14 IST)

பழனிக்கு காவடி எடுப்போம், அண்ணாமலைக்கு காவடி தூக்க மாட்டோம்: திண்டுக்கல் சீனிவாசன்..!

பழனி முருகனுக்கு காவடி எடுப்போம், ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு காவடி எடுக்க மாட்டோம் என அதிமுக பிரமுகர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்து வந்த பின்னர் அண்ணாமலை உள்பட பாஜகவினரை அதிமுக தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கே பி முனுசாமி  உள்ளிட்டோர் கடுமையாக அண்ணாமலையை விமர்சனம் செய்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.


 இந்த நிலையில் பாஜக கூட்டணி முடிவு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறிய போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தான் வருங்கால முதலமைச்சர் என பாஜக கூறியதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று தெரிவித்தார்.

மேலும் பழனிக்கு முருகனுக்கு காவடி இருப்போம் ஆனால் அண்ணாமலைக்கு காவடி தூக்க முடியாது என்றும் அவர் ஆவேசமாக கூறினார். இதற்கு பாஜகவினர் என்ன பதிலே கொடுக்கப் போகின்றனர் என்பதை ஒரு திறந்து பார்ப்போம்

Edited by Siva