Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கோடிக்கணக்கில் கொள்ளையடித்த தினகரன்: போட்டுத்தாக்கும் ஜெயக்குமார்!

கோடிக்கணக்கில் கொள்ளையடித்த தினகரன்: போட்டுத்தாக்கும் ஜெயக்குமார்!

Last Modified: வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (10:12 IST)

Widgets Magazine

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள தினகரன் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து, அந்த பணத்தின் மூலம் கூட்டங்களுக்கு ஆள் சேர்க்கிறார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


 
 
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு. இந்த விசாரணைக்கு காரணம் தினகரன் மதுரை மாவட்டம் மேலூர் பொதுக்கூட்டத்தில் கூடிய கூட்டமும் அமைச்சர் செல்லூர் ராஜூ ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்ததாக கூறியதும் தான் என்ற சந்தேகம் எழுந்தது.
 
இதனை செய்தியாளர்கள் கேள்வியாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், பொதுமக்களின் நியாயமான கோரிக்கை காரணமாகத்தான் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. தலைக்கு 500 ரூபாய் கொடுத்து யார் வேண்டுமானாலும் கூட்டம் கூட்டலாம்.
 
தினகரனிடம் கோடிக்கணக்கான கொள்ளையடிக்கப்பட்ட பணம் இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு கூட்டத்தை சுலபமாக கூட்டலாம். தினகரன் மாதிரியான பசுந்தோல் போர்த்திய எலிகளை மக்களும் அதிமுகவினரும் நம்பத்தயாராக இல்லை. பணம் எந்தகாலத்திலும் எடுபட்டதாக சரித்திரம் இல்லை என்றார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஜெயலலிதா உடல்நிலை குறித்து அவர் அக்கறை கொண்டதே இல்லை: சுப்பிரமணியன் சுவாமி ஆதங்கம்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் செப்டம்பர் 22-ஆம் தேதி சென்னை அப்பல்லோ ...

news

சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை மற்றும் வட தமிழகம் பகுதிகளில் கனமழை ...

news

ஃபேஸ்புக் மீது டிரம்ப் குற்றச்சாட்டு; விளக்கமளித்த மார்க் ஜூக்கர்பெர்க்

பாரபட்சமாக ஃபேஸ்புக் செயல்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியதற்கு ஃபேஸ்புக் ...

news

பாஜகவின் எதிர்ப்பை மீறி மூட நம்பிக்கை ஒழிப்பு; கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்

கர்நாடக மாநிலத்தில் பாகஜவின் எதிர்ப்பை மீறி மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்துக்கு அம்மாநில ...

Widgets Magazine Widgets Magazine