சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை


Abimukatheesh| Last Updated: வியாழன், 28 செப்டம்பர் 2017 (20:38 IST)
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை மற்றும் வட தமிழகம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

 

 
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வடதமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. பெங்களூரில் கனமழை பெய்து வந்த நிலையில் இன்று சென்னையில் திடீரென கனமழை பெய்தது. சென்னை புறநகர் மற்றும் நகர் புறங்களில் பெய்த கனமழையால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
 
தொடர் விடுமுறையை முன்னிட்டு பெரும்பாலானோர் வெளியூர்களுக்கு சென்று கொண்டிருக்கும் சமயத்தில் கனமழை பெய்ததால் பயணிகள் சற்று சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :