1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 14 மே 2024 (11:42 IST)

டாஸ்மார்க் கடையில் வாங்கிய மது பாட்டிலில் பூச்சிகள் இருந்ததால் பரபரப்பு!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையில் உள்ள டாஸ்மார்க் கடையில் ஒரு வாடிக்கையாளர் 150-ரூபாய் கொடுத்து ஒரு பிராந்தி பாட்டில் வாங்கினார்.
 
மது பாட்டிலை வாங்கி உள்ளே பார்த்தபோது அதில் பூச்சிகள் உள்ளே மிதந்தது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த மது பிரியர் சேல்ஸ்மேனிடம் சென்று காண்பித்தார். 
 
சேல்ஸ்மேன் அந்த மது பாட்டலை பெற்றுக்கொண்டு வேறு மது பாட்டிலை மாற்றிக் கொடுத்தார். மேலும் அந்த குடிமகன் இதை என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது அப்படியே வைத்திருந்து கம்பெனிக்கு திருப்பி அனுப்பி விடுவோம் என்று கூறினார்.இச்சம்பவத்தால் அப்பகுதி மதுபான பிரியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.