வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 மே 2024 (09:56 IST)

தகிக்கும் வெயிலில் பீரைத் தேடி ஓடும் மதுப்பிரியர்கள்! – எக்கச்சக்கமாய் எகிறியது பீர் விற்பனை!

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டியெடுத்து வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளில் பீரின் விற்பனையும் அதிகரித்துள்ளது.



தமிழ்நாட்டில் கடந்த மாதம் முதலே வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இந்த மாதம் தொடங்கியது முதலே அக்கினி வெயிலும் படுத்தி எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் தாள முடியாமல் மக்கள் இளநீர் கடை, ஜூஸ் கடை என ஒதுங்கும் அதேசமயம் மதுப்பிரியர்கள் பீர் வாங்க படையெடுத்துள்ளனர்.

வெயிலுக்கு குளிர்ச்சியாக பீர் குடிக்க பலரும் விரும்பும் நிலையில் சமீபத்தில் டாஸ்மாக் கடைகளில் கோதுமையினால் செய்யப்படும் பீர் வகைகளும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் பீர் விற்பனை வழக்கத்தை விட 44 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சாதாரண நாட்களில் 95 ஆயிரம் பெட்டிகள் வரை விற்பனையாகும் பீர், தற்போது 1 லட்சத்து 36 ஆயிரம் பெட்டிகள் விற்பனையாக அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Edit by Prasanth.K