செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 13 ஜூன் 2021 (13:10 IST)

டெல்லியில் பேருந்துகள் இயங்க முதல்வர் உத்தரவு: தமிழகத்தில் எப்போது?

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வந்த நிலையில் பல்வேறு தளர்வுகளை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் அறிவித்து வந்தார் என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி டெல்லியில் பேருந்துகளை இயக்க அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார் இதனையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
டெல்லியில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்டோ, ரிக்ஷா, இ டாக்ஸிகள் 2 பயணிகளுடன் இயங்க அனுமதி என்றும் முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதனை அடுத்து நாளை முதல் டெல்லியில் பேருந்துகள் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
டெல்லியை போலவே தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து விரைவில் தமிழகத்திலும் பேருந்து போக்குவரத்து தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது