1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 13 ஜூன் 2021 (09:09 IST)

இந்தியாவில் கொரோனா பலி 42 லட்சமா? – அமெரிக்க பத்திரிக்கைக்கு ஹர்ஷவர்தன் கண்டனம்!

இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் 42 லட்சம் என அமெரிக்க செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் பலி எண்ணிக்கை மற்றும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. இந்நிலையில் நாள்தோறும் மத்திய சுகாதார அமைச்சகம் இந்தியா முழுவதுமான தினசரி மற்றும் மொத்த கொரோனா பலி மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்களை வெளியிட்டு வருகிறது.

நேற்றைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.94 கோடியாகவும், பலி எண்ணிக்கை 3.6 லட்சமாகவும் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா நிலவரம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை இந்தியாவில் பலி எண்ணிக்கை 42 லட்சமாக இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் “எந்த வித ஆதாரமும் இன்றி இந்தியாவிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.