Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆர்.கே.நகர் தேர்தல் - தீபாவின் வேட்பு மனு நிராகரிப்பு

Last Modified செவ்வாய், 5 டிசம்பர் 2017 (16:26 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 


 
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக தீபா நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். வேட்பு மனுக்களை பரீசிலனை செய்யும் பணி இன்று தொடங்கியது. 
 
இதில், தீபாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
வேட்புமனு தாக்கல் செய்யும் மனுவுடன் படிவம் 26ஐ நிரப்பித்தர வேண்டும். அந்த படிவம் 26ஐ தீபா நிரப்பித்தரவில்லை. அந்த மனுவில் வேட்பாளர் பற்றிய பல தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.  முக்கியமாக, வாக்களரின் வங்கி கணக்குகள், குற்றப்பிண்ணனி, சொத்துக்கள் மற்றும் வழக்குகள் குறித்த விபரங்கள் நிரப்பபட்டு வேட்பு மனுவுடன் கொடுக்கப்பட வேண்டும்.
 
இந்த படிவத்தை கொடுக்காததால் தீபாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :