வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 5 டிசம்பர் 2017 (14:13 IST)

நாள் ஒன்றிற்கு 2 முதல் 3.5 ஜிபி டேட்டா: மாஸ் காட்டும் ஏர்டெல்!!

இலவச 4ஜி இணையதள வசதி மற்றும் வாய்ஸ் கால் சேவைகள் மூலம் ஜியோ தொலைத்தொடர்பு துறையில் பெரிய மாற்றத்தை கொண்டுவந்தது. இதனால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள்  பெரிய சிக்கலை சந்தித்தது.
 
குறிப்பாக ஏர்டெல் ஜியோவுக்கு போட்டியாக பல அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வலையில், ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரூ.349 மற்றும் ரூ.549 திட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்குகிறது. 
 
முன்னதாக ரூ.349 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. தற்சமயம் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.  
 
அதேபோல் ரூ.549 திட்டத்தில் தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் தினமும் 3.5 ஜிபி டேட்டா வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இத்துடன் அன்லிமிட்டெட் அழைப்புகள், எஸ்எம்எஸ்  28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
இதற்கு முன்னர், ரூ.349-க்கு ரிசார்ஜ் செய்தால் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினமும் வழங்கப்பட்ட 1 ஜிபி டேட்டா 1.5 ஜிபியாக உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.