1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 10 மே 2023 (18:47 IST)

அதிமுகவை திமுகவிடம் விற்க வேண்டும் என்பதே ஓபிஎஸ் நோக்கம்: சி.வி.சண்முகம் பேட்டி

அதிமுகவை பலவீனப்படுத்தி அதை திமுகவிடம் விற்க வேண்டும் என்பதே ஓபிஎஸ் நோக்கம் என சிவி சண்முகம் பேட்டி அளித்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
டெல்லியில் மக்களவை சபாநாயகர் இடம் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை அதிமுக எம்பி ஆக ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று மனு அளித்தார். அதன் பிறகு சிவி சண்முகம் செய்தியாளர்களிடம் பேசியபோது ’அதிமுகவை பலவீனப்படுத்திய திமுகவின் விற்கவிடம் விற்க வேண்டும் என்பதே ஓபிஎஸ் நோக்கம் என்று கூறினார். 
 
மேலும் சசிகலாவையும் டிடிவி தினகரனையும் எதிர்த்து தர்ம யுத்தம் நடத்தியவர் தான் ஓபிஎஸ் என்றும் தினகரன் ஓபிஎஸ் சந்திப்பால் எந்த தாக்கமும் அதிமுகவுக்கு இல்லை என்றும் தெரிவித்தார். 
 
மேலும் அதிமுகவுக்கு எந்த காலத்திலும் ஓபிஎஸ் விசுவாசமாக இருந்ததில்லை என்றும் அதிமுக இயக்கத்தை பிளவுபடுத்தியவர் ஓபிஎஸ் என்றும் அவர் ஒரு திமுகவின் விசுவாசி என்றும் கூறினார்.
 
Edited by Mahendran