வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 22 டிசம்பர் 2023 (07:40 IST)

அதிமுக முன்னாள் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு.. தனியார் மருத்துவமனையில் அனுமதி..!

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மிகப்பெரிய மனித அழிவை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது தான் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாமல் கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் நிம்மதியாக உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் படிப்படியாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்  முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.  

இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 100ஐ தாண்டி உள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Edited by Siva