1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 17 நவம்பர் 2020 (13:41 IST)

அந்த கல்குவாரிய ஏலத்துல எடுத்தப்போ சட்டம் தெரியலையா? – ஸ்டாலினுக்கு அமைச்சர் கேள்வி!

தமிழக அதிமுக எம்.எல்.ஏவின் மகனுக்கு குவாரி குத்தகைக்கு அளிக்கப்பட்ட விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிட்ட நிலையில் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக அரசு தொடர்ந்து ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபடுவதாக சமீபத்தில் கண்டன அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலிம் அதில் அதிமுக எம்.எல்.ஏ சக்ரபாணி மகனுக்கு குவாரி குத்தகைக்கு அளிக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் “கல் குவாரி ஏலத்தில் சட்ட ரீதியாகவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ மகன் கல் குவாரியை ஏலத்தில் எடுக்க கூடாது என எந்த சட்டமும் இல்லை. சட்டப்புலி மு.க.ஸ்டாலின் நுனிப்புல் மேயாமல் ஆவணங்களை கவனமாக படிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் திமுக பொதுசெயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆன்ந்தின் மனைவி சங்கீதா பெயரில் காட்பாடியில் கல்குவாரி குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர் இது தவறு என்றால் அது என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.