வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 17 நவம்பர் 2020 (12:09 IST)

மு.க.அழகிரி பாஜகவில் இணைந்தால் மகிழ்ச்சி! – கொக்கி போடும் எல்.முருகன்!

மு.க.அழகிரி பாஜகவில் இணைந்தால் வரவேற்பதாக பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவிலிருந்து விலகி பல காலமாக அரசியல் தொடர்பின்றி இருந்த மு.க.அழகிரி புதிய கட்சி தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து அவரது ஆதரவாளர்களோடு அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்ட நிலையில் பாஜகவோடு அவர் இணைய போவதாகவும் பேசிக்கொள்ளப்பட்டது.

ஆனால் இந்த தகவல்களை மறுத்துள்ள மு.க.அழகிரி புதிய கட்சி தொடங்கும் எண்ணம் தமக்கு இல்லை என கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் குறித்து பேசியுள்ள பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் ”மு.க.அழகிரி பாஜகவில் இணைந்தால் கண்டிப்பாக வரவேற்போம்” என கூறியுள்ளார். அவரது இந்த பதில் மு.க.அழகிரிக்கு விடுக்கப்படும் ரகசிய அழைப்பு என அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் மு.க.அழகிரி பாஜகவில் இணைவாரா அல்லது புதிய கட்சி தொடங்குவாரா என அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.