ரஷ்ய அதிபர் புதின் கனடாவிற்குள் நுழைய தடை! – அதிரடி காட்டும் ஜஸ்டின் ட்ருடோ!
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் நடத்தி வரும் நிலையில் ரஷ்ய அதிபருக்கு கனடா தடை விதித்துள்ளது.
உக்ரைன் மீது கடந்த பல மாதங்களாக ரஷ்யா போர் நடத்தி வருகிறது. பதிலுக்கு உக்ரைனும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இரு தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் இந்த போரை உலக நாடுகள் பலவும் கண்டித்து வருகின்றன.
கனடா அரசு இந்த போர் விவகாரத்தில் ரஷ்யாவை கண்டித்துள்ளதுடன் உக்ரைனில் இருந்து அகதிகளாய் வெளியேறும் மக்களுக்கும் அடைக்கலம் அளித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் செயலுக்கு எதிர்ப்பு காட்டும் விதமாக கனடா அரசு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உட்பட ரஷ்ய ராணுவத்தை சேர்ந்த 1000 பேர் கனடாவிற்குள் நுழைய தடை விதித்துள்ளது.
இதற்கான மசோதாவை கனடா அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.