1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 26 ஏப்ரல் 2023 (14:28 IST)

விளையாட்டு மைதானங்களில் மது: சென்னை உயர்நீதிமன்றம் தடை

விளையாட்டு மைதானங்களில் மதுபானம் விநியோகிக்க அனுமதி என தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்த நிலையில் இதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
 
விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற தமிழக அரசு அனுமதி அளித்திருந்த நிலையில் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்ட மனு மீது ஆன விசாரணை இன்று நடந்தது.
 
சர்வதேச அரங்குகள் விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற வழி செய்யும் திருத்தத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஏற்கனவே திருமண மண்டபங்களில் மதுபான பரிமாற அனுமதி அளிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக தமிழக அரசு அதனை திரும்ப பெற்றது. இந்த நிலையில் விளையாட்டு மைதானங்கள் சர்வதேச கருத்தரங்குகளில் மதுபான பரிமாற சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva