விமானியை மணக்கும் நடிகை சுவாதி! காதல் திருமணம்!

VM| Last Modified செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (15:52 IST)
தமிழில் சுப்பிரமணியபுரம் படம் மூலம் அறிமுகம் ஆனவர் சுவாதி. இவர், அந்த படத்தில் கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் என்ற பாடல் மூலம் கண்களால் காதல் மொழி பேசி, ரசிகர்களை வசியம் செய்தார்.


இதைத்தொடர்ந்து கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கும் அவர் ஹைதராபாத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 
 
சுவாதிக்கு கடந்த ஒருவருடங்களாக படங்கள் இல்லை. இதனால் சுவாதிக்கு விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். இந்த நிலையில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ் என்பவருடன் சுவாதிக்கும் நட்பு ஏற்பட்டு, பின்பு காதலாக மாறியது.

 
இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். இருவரது பெற்றோர்களும் திருமணத்துக்கு சம்மதித்தனர். இதைத்தொடர்ந்து சுவாதி–விகாஸ் திருமணம் வருகிற 30ந் தேதி ஹைதராபாத்தில் நடக்கிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை செப்டம்பர் 2–ந்தேதி கொச்சியில் நடத்துகின்றனர். விகாஸ் இந்தோனேசியாவில் உள்ள ஜாகர்த்தாவில் வசிக்கிறார். திருமணத்துக்கு பிறகு சுவாதி கணவருடன் ஜாகர்த்தாவில் குடியேற உள்ளாராம்.


இதில் மேலும் படிக்கவும் :