டிஸ்சார்ஜ் ஆகும்போது கொரோனா பரிசோதனை தேவையில்லை! – சுகாதாரத்துறை கடிதம்!
தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்படுபவர்களுக்கு மறு பரிசோதனை தேவையில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆகும்போது அவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அனைத்து மருத்துவமனைகளுக்கு கடிதம் அனுப்பியுள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கொரோனா நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன் மறுபரிசோதனை தேவையில்லை என்றும், மிதமான அறிகுறிகள் தென்பட்டால் பாதிக்கப்பட்டவரை 10 நாள் கழித்து டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என்றும், லேசான அறிகுறி உள்ளவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளவும் அதில் கூறப்பட்டுள்ளது.