திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By ஆனந்த குமார்

கரூர்: பசுபதீஸ்வரா ஐயப்பன் கோவில் அருள்மிகு ஸ்ரீ மஞ்சள் மதாவுக்கு சிறப்பு அபிஷேகம்

பசுபதீஸ்வரா ஐயப்பன் கோவில் ஸ்ரீ ஐயப்பன், அருள்மிகு ஸ்ரீ மஞ்சள் மதாவுக்கு சிறப்பு அபிஷேகம் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த ஐயப்பனுக்கு கரூர் பசுபதீஸ்வரா ஐயப்பன் கோவில் ஸ்ரீ ஐயப்பன், அருள்மிகு ஸ்ரீ மஞ்சள் மதாவுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்  மஹாதீபாரதனை நடைபெற்றது.
ஐயப்பன் பிறந்த நட்டத்திரமான உத்திரடாம் நிகழ்வு தமிழகத்தில் உள்ள அனைத்து ஐயப்பன் ஆலயங்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாரதனை நடைபெற்று வருகிறது. கேரளா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஐயப்பன் பிறந்த நட்சத்திரமான உத்திராடத்தில் பிறந்த தினம் இன்று அதனால் தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தில் ஸ்ரீ ஐயப்பன் ஆலயங்களில் சிறப்பு வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
 
கரூர் மாவட்டம் பசுபதீஸ்வரா ஐயப்ப ஆலயத்தில் காலை மூர்த்தி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து ஐயப்பன் மற்றும் மஞ்சள் மாதவுக்கு திருநீர், மஞ்சள், திருமஞசனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஐயப்பனுக்கு வெள்ளி காப்பு அலங்காரம் செய்யப்பட்ட மஹா தீபாரதனை நடைபெற்றது. இந்த விழாவுக்கு திறளா பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோரவில் நிர்வாகம் செய்திருந்தது. ஆலயத்திற்கு வந்திருந்த அனைவருக்கும்  அன்னதானம் வழங்கப்பட்டது.