வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 21 மே 2021 (16:46 IST)

எழுவர் விடுதலை முட்டுக்கட்டை போடும் காங்கிரஸ் தலைவர்கள்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறை தண்டனை பெற்று வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட  7 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் முதல்வரோடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் இப்போது குடியரசுத் தலைவருக்கு கடிதமும் நேற்று எழுதப்பட்டது.

இந்நிலையில் இன்று ராஜீவ்காந்தியின் 30 ஆவது நினைவுநாளை முன்னிட்டு காங்கிரஸ் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் ஏழு பேர் விடுதலை குறித்து காங்கிரஸ் தமிழ்நாடு தலைவரான கே எஸ் அழகிரி முதலானோர் இந்த முடிவில் தங்களுக்கு உடன்பாடு இல்லை எனக் கூறியுள்ளனர்.