1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (10:57 IST)

காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு எதிரானது அல்ல: கே.எஸ்.அழகிரி

ks alagiri
காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறியுள்ளார்
 
காங்கிரஸ் கட்சி இந்து மதத்துக்கு எதிரானது என்றும் இந்து மதத்தை குறை கூறும் கட்சி என்றும் சமீபகாலமாக ஒரு கருத்து வளர்ந்து வருகிறது. ஆனால் அது உண்மை அல்ல
 
காங்கிரஸ் கட்சி இந்து மதத்தின் மீது நம்பிக்கை உடைய ஒரு அரசியல் கட்சி என்று தெரிவித்தார். காந்தி நான் ஒரு இந்து, இராமனை வழிபடுகிறேன். ஆனால் அதே நேரத்தில் அடுத்தவரிடம் திணிக்க மாட்டேன் என்று கூறினார்
 
இது தான் காங்கிரஸ் கட்சியின் தத்துவம். மதச் சார்பின்மை, பிரிவினை வாதம் பேசுபவர்கள், மதத்துக்கு எதிராக பேசுபவர்கள், மொழி எதிர்ப்புப் பேசுபவர்கள், இன உணர்வுகளை தூண்டி விடுவோர் காலப்போக்கில் தோல்வி அடைவார்கள் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி கூறியுள்ளார்
 
Edited by Mahendran