1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 24 ஜூலை 2018 (20:06 IST)

மொய் விருந்தில் வரலாற்றில் இது ஒரு புரட்சி; அசத்தும் புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொய் விருந்தில் கணினி மூலம் பணம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடி மாதம் இந்த மொய் விருந்து பிரசித்து பெற்றது. 10 முதல் 20 பேர் வரை சேர்ந்து ஒரு மொய் விருந்தை நடத்துகின்றனர். மொய் எழுதுவதற்கென ஆட்களை சம்பளத்திற்கு பிடிக்க வேண்டியுள்ளதாக தற்போது புது டெக்னிக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர்.
 
முத்ல்முறையாக மொய் எழுதுவதற்கு கணினியை பயன்படுத்தியுள்ளனர். இந்த கணினி மயமான மொய் விருந்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மொய் எழுதியவர்களுக்கு கணினி ரசீது, செல்போனில் குறுஞ்செய்தி என சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.