1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 10 ஏப்ரல் 2024 (14:08 IST)

ஓய்வில்லாமல் உழைப்பதாக கூறும் மோடிக்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறோம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உ.வாசுகி

ஓய்வே இல்லாமல் உழைப்பதாக கூறும் பிரதமர் மோடிக்கு நாங்கள் ஓய்வு கொடுக்க விரும்புகிறோம் என்று கம்யூனிஸ்ட் கட்சி வாசுகி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாசுகி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறும் போது ’கடந்த பத்து ஆண்டுகளில் விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோர் சிரமப்படுகிறார்கள் என்றும் நீட் தேர்வு உள்பட பல்வேறு தேர்வு காரணமாக மாணவர்கள் சிரமப்படுகிறார்கள் என்றும் மக்கள் விரோத சட்டங்கள் தான் இந்த ஆட்சியில் அதிகம் இருந்தது என்றும் தெரிவித்தார்

பாஜகவை எதிர்ப்பது போல எடப்பாடி பழனிச்சாமி நாடகமாடுகிறார் என்றும் இந்த தேர்தலில் மோடியை மட்டும் அல்ல எடப்பாடி பழனிசாமியையும் வீழ்த்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் மோடி ஓய்வில்லாமல் உழைத்து வருவதாக கூறுகிறார், ஆனால் அவர் யாருக்காக உழைத்தார் என்பது தான் கேள்வி , இருப்பினும் அவருக்கு நாங்கள் நிரந்தரமாக ஓய்வு கொடுக்க விரும்புகிறோம், இந்த தேர்தல் முடிந்தததும் அவர் தாராளமாக ஓய்வெடுக்கலாம் என்றும் கூறியுள்ளார்

Edited by Mahendran