வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : திங்கள், 25 நவம்பர் 2024 (10:15 IST)

இன்னும் சில நிமிடங்களில் நாடாளுமன்ற கூட்டம்: பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பிரதமர் மோடி!

PM Modi speech
இன்னும் சில நிமிடங்களில் நாடாளுமன்ற கூட்டம் தொடங்கவிருக்கும் நிலையில் பத்திரிக்கையாளர்களை பிரதமர் மோடி சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று  மக்களவை மற்றும் மாநிலங்களவை காலை 11 மணிக்கு கூடுகிறது. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு பத்திரிக்கையாளர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கிறார் 
 
இந்த சந்திப்பின்போது அவையை சுமூகமாக நடத்த எதிர்கட்சி எம்.பிக்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆனால் நாடாளுமன்ற  அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த அதானி முறைகேடு விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளது. 
 
எனவே நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சி எம்பிக்கள் ஸ்தம்பிக்க வைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அதானி முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 
Edited by Mahendran