1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 27 ஜனவரி 2023 (13:39 IST)

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நல்லகண்ணு அனுமதி: தீவிர சிகிச்சை

nallakannu
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலம் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
வயோதிகம் மற்றும் சில உடல் நலப் பிரச்சினை காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணு சமீபத்தில் தனது 97வது பிறந்த நாளை கொண்டாடினார். 
 
இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் கிருமி தொற்றால் அவர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் நுரையீரல் தொற்றும் அவருக்கு உள்ளதாகவும் தெரிகிறது 
 
இதனை அடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் 
 
தற்போது அவர் நலமடைந்து  வருவதாகவும், இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran